"தீரன் அதிகாரம் ஒன்று" கதைக்கருவான முன்னாள் அமைச்சர் கொலை, கொள்ளை வழக்கில் 15 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப் படத்தின் கதைக் கருவான, முன்னாள் அதிமுக அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 15 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கைதான ஓம் பிரகாஷ் பவாரியா சிறையிலேயே உயிரிழந்தான். அவனது சகோதரன், ஜெகதீஷ் பரா 2005லிருந்து விசாரணை கைதியாக இருந்து வருகிறான். இவன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருந்தது குறித்து அதிருப்தி வெளியிட்டார்.
9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? என்றும், ஏன் இவ்வளவு தாமதம் என்றும் காவல்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
Comments