இமாச்சல் பிரதேசத்திலும் பரவியது பறவைக் காய்ச்சல்.. கொத்துக்கொத்தாக செத்து மடிந்த பறவைகள்..!

0 972
இமாச்சல் பிரதேசத்தில், திடீரென ஆயிரத்து 800 பறவைகள், கொத்து, கொத்தாக செத்து மடிந்ததற்கு, H5N1 வைரசால் ஏற்படும், ஏவியன் ஃபுளூ எனப்படும் பறவைக் காய்ச்சல் தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகத், தகவல் வெளியாகியுள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் பனிப்பொழிவு சீசன் என்பதால், சுற்றுலா பயணிகள் வருகை தொடர்கிறது. இந்நிலையில், காங்ரா (Kangra) மாவட்டத்தின் பாங் டேம் (Pong Dam) ஏரி வன உயிரியல் பூங்காவில், குளிர்காலத்தையொட்டி வலசை வந்த பறவைகளும், சில வாத்து இனங்களும் என 1800 பறவைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்த ஆய்வின் முடிவில், பறவைக் காய்ச்சலால் தான் அவை உயிரிழந்துள்ளது, உறுதி செய்யப்பட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, காங்ரா மாவட்டத்தில் சுற்றுலாவிற்கும், மற்றும், கோழி கொள்முதல், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments