காதலனுடன் ஒரே அறையில் இருந்த தனது சொந்த அக்காவை அடித்துக் கொன்று தம்பி போலீசில் சரண்

சென்னை எண்ணூரில் காதலனுடன் ஒரே அறையில் இருந்த சகோதரியை கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரணடைந்தான்.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுப்புலட்சுமி, கணவர் பிரிந்து சென்று விட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அக்காள் சுப்புலட்சுமியைப் பார்க்க அவரது தம்பி பிரதாப் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் வீட்டின் அறையில் பதுங்கி இருந்துள்ளார்.
இருவருக்கும் தவறான தொடர்பு இருந்ததை அறிந்த பிரதாப், இருவரையும் அடித்து உதைத்துள்ளார். சுப்புலட்சுமியின் கழுத்தில் பிரதாப் காலை வைத்து மிதித்ததில் அவர் உயிரிழந்ததை அடுத்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார். வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஜானகி ராமனை மீட்ட போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments