கனமழையின் எதிரொலி:செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு

சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியாக, செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடிக்கும் கீழ் வைத்து கண்காணிக்கும் பொருட்டு, 5 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதகிலிருந்து ஆர்ப்பரித்து வெளியேறிய நீரால், அதனை ஒட்டிய குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோன்று, புழல் ஏரியின் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கடலில் கலக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தபட்டுள்ளது.
Comments