தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு போதுமான அளவு ஊசிகள் கைவசம் உள்ளன - ராதாகிருஷ்ணன்

சென்னையில் உருமாறிய கொரோனா தொற்றுக்கு ஆளான 4பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கு, போதுமான அளவிற்கு ஊசிகள் கைவசம் உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், கொரோனா தடுப்பூசி சேமித்துவைக்கும் அறையை அவர் ஆய்வு செய்தார். தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தமிழகம் முழுவதும் 51 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக பின்னர் அவர் குறிப்பிட்டார்.
பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பதிலளித்த ராதாகிருஷ்ணன், இதற்காக 6 மாவட்ட எல்லைகளில் 26 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
தியேட்டர்கள் 100% இருக்கைகளோடு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது பற்றி வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலர் பதிலளித்தார்.
Comments