பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது உறுதி, திட்டமிட்டபடி குடியரசு தின விழாவில் கலந்து கொள்வார் என பிரிட்டன் தூதரக அதிகாரிகள் தரப்பில் தகவல்

0 1088

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டபடி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் பங்கேற்க போரிஸ்ஜான்சன் ஒப்புதல் அளித்திருந்தார். பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போரிஸ்ஜான்சனின் இந்தியா வருகை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன.

ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரிட்டன் தூதரக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments