திருத்தணியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண்கள் 18 பேர் உட்பட 21 பேர் காயம்

0 3013
திருத்தணியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன பேருந்து கவிழ்ந்து விபத்து - பெண்கள் 18 பேர் உட்பட 21 பேர் காயம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அம்மையப்பர் என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்திற்கு ஆந்திர மாநிலம் பள்ளிபட்டில் இருந்து பணியாளர்களை ஏற்றிவந்த பேருந்து பொன்பாடி - திருத்தனி சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 18 பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, பேருந்து வந்து கொண்டிருந்த சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக பேரிகார்டுகள் இருந்துள்ளது.

அதே சாலையில் மறு மார்க்கத்தில் லாரி ஒன்று வந்ததால், பேரி கார்டு இருப்பதை எண்ணி, ஓட்டுநர் பேருந்தை இடதுபுறமாக லேசாக திருப்ப முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

அப்போது, வந்த வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்திருக்கலாம் என சொல்லப்படுகின்றது.

கடந்த 2 வருடத்தில் அம்மையப்பர் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து 4 முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments