2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்கள், செவிலியர்களை தேர்வு செய்வதில் தற்போதைய நிலையே தொடர உத்தரவு

தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்வதில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை தேர்வு செய்வதில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மினி கிளினிக்குகளுக்கான மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் ஏஜென்சி முறையில் தேர்வு செய்யப்படுவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை மேல் நடவடிக்கைகளை எடுக்காமல் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டனர்.
Comments