இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு ஆலோசனை

இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசு ஆலோசனை
இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்புதல் வழங்குவது தொடர்பாக பிரேசில் அரசு ஆலோசித்து வருகிறது.
பிரேசிலின் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனமான அன்விசா (Anvisa) மற்றும் Fiocruz நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியின் வீரியம் குறித்து சீரம் நிறுவனத்திடம் தகவல்களை கேட்டறிந்தது.
முன்னதாக பிரேசிலில் உள்ள சில தனியார் நிறுவனங்கள் இந்தியவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசியை பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் அஸ்ட்ராஜெனிகாவின் 2மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Comments