ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

ஈரோடு - சென்னை ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்
ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 10ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ரயில் இயக்கப்படாமல் இருந்ததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், 10ந் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரவு 9 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு, சென்னைக்கு 4.30 மணிக்கு வந்தடையும் என்றும், மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு காலை 6.15 மணிக்கு ஈரோட்டை சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments