மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.6,000 கோடியை விடுவித்தது மத்திய அரசு

0 807
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.6,000 கோடியை விடுவித்தது மத்திய அரசு

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், 10வது தவணைத் தொகையாக இந்த தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் 5 ஆயிரத்து 516 கோடியே 60 லட்சம் ரூபாய் 23 மாநிலங்களுக்கும், 483 கோடியே 40 லட்சம் ரூபாய் டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரத்து 627 கோடி ரூபாய் கடனாக பெற அனுமதி அளிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 870 கோடியே 80 லட்சம் ரூபாய் இது வரை கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments