ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் தேதி வருகிற 7ந்தேதி அறிவிப்பு- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

0 638
ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வுகள் தேதி வருகிற 7ந்தேதி அறிவிப்பு- அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2021 தேர்வுகள் தேதியை வருகிற 7ந்தேதி அறிவிக்கப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் 7ந்தேதி மாலை ஆறு மணிக்கு வெபினார் நிகழ்ச்சியில் தேர்வுகள் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெபினார் நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் ஒளிபரப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியின் போது எத்தனை முறை ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதலாம், தேர்வுக்கான தகுதி, கால அட்டவணை ஆகியவற்றை அமைச்சர் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments