36 வயதினிலே ஒரு விபரீத காதல்..! பால்டாயில் காதலன் வெறி..!

0 72288
36 வயதினிலே ஒரு விபரீத காதல்..! பால்டாயில் காதலன் வெறி..!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், விபரீத காதலில் விழுந்த 36 வயது பெண்ணை கொலை செய்ததாக, இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசுக்கு பயந்து காதில் பால்டாயில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற போதைக் காதலன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு 

சிதம்பரம் அருகே புவனகிரி- கடலூர் மெயின் ரோட்டில் உள்ள ஆடிட்டர் அலுவலக மாடிப் படிக்கட்டுகளுக்கு அடியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியா என்ற 36 வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.

காவல்துறையினர் அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கடந்த 29 ந்தேதி இரவு அந்த கட்டிடத்திற்கு சந்தியாவை ஆண் நபர் அழைத்து செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது. பின்னர் நீண்ட நேரம் கழித்து அதிகாலை வேளையில் அந்த ஆண் நபர் மட்டும் தனியாக அங்கிருந்து வெளியே செல்வதையும் கண்டறிந்தனர்.

விசாரணையில் அந்த நபர்,தரசூர் கிராமத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் முரசொலிமாறன் என்பது தெரியவந்தது. தனிப்படை அமைத்து தேடிய காவல்துறையினர், அவிநாசியில் பதுங்கி இருந்த அவனை சுற்றி வளைத்தனர்.

போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக அந்த நபர்,  பால்டாயில் என்னும் கொடிய விஷத்தை தனது காதில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றான், அவனை கைது செய்த போலீசார் அவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் 5 வருடத்திற்கு முன்பு புதுச்சேரி மில் ஒன்றில் சத்யாவும், முரசொலிமாறனும் ஒன்றாக வேலைபார்த்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. கணவர் ஊரில் இல்லாத நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வதை வாடிக்கையாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முரசொலிமாறனை தேடிச்சென்றுள்ளார் சத்யா, அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் இருவரும் தனிமையை கழித்துள்ளனர். அப்போது தன்னை திருமணம் செய்துகொள்ள சத்யா வற்புறுத்தியதால் போதையில் இருந்த முரசொலி மாறன், சத்யாவிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இதில் காதலி சத்யா பரிதாபமாக பலியான நிலையில் அவரது சடலத்தை மறைப்பதற்காக மாடிப்படிகளுக்கு அடியில் உள்ள பழைய பொருட்களுக்குள் போட்டு விட்டு தப்பியுள்ளான். மேலும் சத்யாவின் உடல் கூறு அறிக்கையில் சத்யா உயிரிழந்த பின்னரும் அவர் பாலியல் ரீதியாக கொடூரமாக துன்புறுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசில் சிக்கிக் கொண்டால் அவமானப்பட நேரிடுமே என்ற அச்சத்தின் காரணமாகவே சடலத்தை மறைத்ததோடு, காதில் பால்டாயிலும் ஊற்றி தற்கொலை செய்து கொள்வது போல நடித்துள்ளதும் அம்பலமானது.

தனது குடும்பத்திற்காக கணவர் வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருக்க, இரு மகன்கள் இருக்கும் நிலையில் 36 வயதை 16 ஆக நினைத்து காதல் யுத்தம் செய்ததால் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் சத்யா என்று சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments