பாஸ்ட் அண்ட் பியூரியஸ் ஓட்டுனருக்கு அடி உதை..! தனியார் கலெக்ஷன் டல்..!

0 26625
https://www.youtube.com/watch?v=-ZW_vT7dTJ0

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சாலையில் யார் முந்திச்செல்வது ? என்ற போட்டியில் அதிவேகமாக பேருந்துகளை ஓட்டிச்சென்ற, அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பானது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுனரைத் தாக்கியதாக தனியார் பேருந்து ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையிலிருந்து பெரியகுளம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தினை உதயசூரியன் என்பவர் இயக்கிச் சென்றார்.

அரசு பேருந்துக்கு பின்னால் கிளம்பிய தனியார் பேருந்துக்கும் அரசு பேருந்துக்கும் இடையே யார் முந்தி செல்வது ? என பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படத்தில் செல்வது போல அதிவேகமாக போட்டி போட்டுச்சென்றதாக கூறப்படுகின்றது.

பள்ளப்பட்டி, நிலக்கோட்டை என வழி நெடுகிலும் இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் தங்கள் பேருந்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு கொண்டு வந்துள்ளனர். அந்த பேருந்தில் பயணித்தோர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணித்துள்ளனர். இரு பேருந்துகளும் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்குள் எதிர்ரெதிர் திசையில் நுழைந்து ஒன்றின் குறுக்கே ஒன்றை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு பேருந்தால் தங்கள் கலெக்சன் பாதிக்கப்பட்டதாக கருதிய தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் செக்கர் ஆகியோர் ஆத்திரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் உதயசூரியன் அளித்த புகாரின் பேரில் வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிந்து தனியார் பேருந்து ஊழியர்கள் முத்துக்காளை, ராஜேஷ் கண்ணா ஆகியோரை கைது செய்தனர்.

பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக பேருந்தை அதி வேகத்தில் இயக்கும் ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு,சம்பந்தப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments