தமிழகத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்குகளில் 2000 மருத்துவர்கள் நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் உள்ள அம்மா மினிகிளினிக்குகளில் 2000 மருத்துவர்கள் நியமனம்- அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் 2 ஆயிரம் புதிய மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள நமணசமுத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மினி கிளினிக்குகளில் மருத்துவர்களை நியமிக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.
2000 பேரில் முதற்கட்டமாக 835 பேர் இந்த வாரம் நியமிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார். இதே போன்று 2000 நர்சுகள், 2000 உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments