தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கியது

0 2432
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கியது

மிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. அனைத்து ரேசன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கி உள்ள நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் படி, காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கடையிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டனர். ரொக்க பணத்தை கவர்களில் போட்டு வழங்கக்கூடாது என்று ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொருவருக்கும் 2,500 ரூபாயை எண்ணி வெளிப்படையாகவே வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து வருகிற 13-ந்தேதி வரை பரிசு பொருட்கள் வினியோகம் நடக்கிறது.

குறிப்பிட்ட நாளில் கடைகளுக்கு சென்று வாங்க இயலாதவர்கள் 13-ந் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments