கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்- பாரத் பயோடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கண்டனம்

0 2810
கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்- பாரத் பயோடெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கண்டனம்

கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் செய்வதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், பிரிட்டன் உள்ளிட்ட 12 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே 16 தடுப்பூசிகளை தயாரித்த அனுபவம் தங்களுக்கு இருப்பதாகவும், 123 நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி தொடர்பான தரவுகள் பற்றி 70க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சர்வதேச பத்திரிகைகளில் வெளிவந்துள்ளதாகவும் கிருஷ்ணா விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments