மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறைவு... 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் உள்ள எஞ்சிய 47 இடங்களும் நிரம்பின

0 3596
மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறைவு... 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் உள்ள எஞ்சிய 47 இடங்களும் நிரம்பின

ருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான இன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் உள்ள எஞ்சிய 47 இடங்களும் நிரப்பப்பட்டன.

அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்து அதிக கட்டணம் என கருதி வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவிகள் 3 பேருக்கு, முன்னுரிமை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments