டெல்லியில் நடைபெற்ற ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை : போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மவுன அஞ்சலி

டெல்லியில் நடைபெற்ற ஏழாம் கட்டப் பேச்சுவார்த்தை : போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மவுன அஞ்சலி
டெல்லியில் நடைபெற்ற ஏழாம் கட்டப் பேச்சின்போது, மத்திய அமைச்சர்களும் விவசாயிகளும், போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் இடையே உடல்நலக் குறைவாலும், கடுங்குளிரைத் தாங்க முடியாமலும் ஐம்பதுக்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாயிகள் சங்கம் கூறி வருகிறது.
Comments