நெல்லையில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் நினைவு மணிமண்டப திறப்பு விழா... ஒரே வாகனத்தில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

0 1961
நெல்லையில் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் நினைவு மணிமண்டப திறப்பு விழா... ஒரே வாகனத்தில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

நெல்லை சேரன்மகாதேவியில் கட்டப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மணிமண்டப திறப்பு விழாவுக்கு ஒரே காரில் வந்த முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஒரே வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே வாகனத்தில் நெல்லை வந்தனர். நெல்லை மேலப்பாளையம் கருங்குளத்தில் திறந்த ஜீப்பில் இருவரும் பொதுமக்களிடையே வாக்குசேகரித்தனர்.

பின்னர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சேரன்மகாதேவி கோவிந்தபேரி சென்று பி.எச்.பாண்டியன் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments