அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே வீட்டின் மீது சிறிய விமானம் மோதி விபத்து

0 1618
அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே வீட்டின் மீது சிறிய விமானம் மோதி விபத்து

அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே ஒரு வீட்டில் உள்ளோர் என்ன படம் பார்க்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மிச்சிகன் மாநிலத்தில் ஓக்லேண்ட் விமான நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்புகளின் மீது விமானங்கள் அடிக்கடி தாழ்வாகப் பறந்து செல்வது வழக்கம்.

இதனால் எந்த நேரத்தில் விமானம் தங்கள் வீட்டின் மீது விழுமோ என்னும் அச்சத்துடனேயே அப்பகுதி மக்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு வீட்டில் உள்ளவர்கள் என்ன படம் பார்க்கலாம் எனப் படுக்கையறையில் இருந்து பேசியுள்ளனர்.

அவர்கள் அங்கிருந்து வேறொரு அறைக்குச் சென்ற சற்றுநேரத்தில், அந்த வீட்டில் அவர்கள் முன்னர் இருந்த அறைமீது சிறிய விமானம் மோதி நொறுங்கித் தீப்பிடித்து  எரிந்தது.

இந்த விபத்தில் விமானத்தின் பைலட்டும் பயணிகள் இருவரும் உயிரிழந்தனர். வீட்டில் இருந்த ஐந்து பேரும் உயிர்தப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments