கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும்- பிரதமர் நரேந்திர மோடி தகவல்

0 1021
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்கும்- பிரதமர் நரேந்திர மோடி தகவல்

லகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விரைவில் தொடங்குமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய அளவியல் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். மேலும், தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆய்வகத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய விஞ்ஞானிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கொரோனா தடுப்பூசிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றார்.

விஞ்ஞானிகளால் நாடு பெருமை கொள்கிறது என்ற அவர், உலகளாவிய தேவை மட்டுமல்லாமல், இந்தியா' தயாரிப்புகளை உலகமே ஏற்றுக்கொள்ள பாடுபடவேண்டும் என்றார்.

தரம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் இந்திய தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments