தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்... அடுத்த மூன்று நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

0 12336
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்... அடுத்த மூன்று நாட்களுக்கு 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மிழகத்தில் அடுத்த மூன்று நாட்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், வடகடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

5 ஆம் தேதி அன்று தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

6 ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், தேனி,நீலகிரி, கோவை, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 7, 8 ஆம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments