அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள் ? சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு கேள்வி

0 2731
அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள் ? சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு கேள்வி

அரசியல் களத்தில் சந்திக்க வேண்டிய அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்த பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசியல் சண்டைகளை ஏன் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, அரசாணையின் செல்லுபடித் தன்மை குறித்தும், குறிப்பிட்ட திருத்தத்தை மட்டுமே எதிர்த்தும் வழக்கு தொடர்ந்துள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments