நடந்து சென்ற இளைஞர் மீது அதிவேகமாக மோதிய பொலிரோ கார்… பதைதைக்கும் சிசிடிவி காட்சிகள்
சேலம் அன்னதானப்பட்டி அருகே அதிவேகமாக சென்ற பொலிரோ கார், சாலையோரத்தில் இளைஞர் ஒருவரை மோதி தூக்கி வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இளைஞரை மோதியதோடு நில்லாமல், வங்கி வாசல் முன்பாக நின்றிருந்த மற்றொரு பெண் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய பிறகே கார் நின்றுள்ளது.
காரை ஓட்டிவந்த, நாமக்கல் மாவட்டம் சொக்கநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேசனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கார் திடீரென பிரேக் பிடிக்காததால் விபத்து நேரிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.
ஆனால் காரில் பிரேக் பிடிப்பதை உறுதிப்படுத்தியுள்ள போலீசார் செல்போனில் பேசியபடி அலட்சியமாக காரை இயக்கியதால் விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அந்த நபர் ஓட்டிவந்த பொலிரோ காரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி படுகாயம் அடைந்த இளைஞரும், பெண்ணும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments