சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.536 உயர்வு
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து 500 ஐக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று கிராம் தங்கத்தின் விலை 4ஆயிரத்து 748 ரூபாயாகவும், சவரன் தங்கத்தின் விலை 37ஆயிரத்து 984 ரூபாயாகவும் இருந்தது. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, கிராமுக்கு 67 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து748 ரூபாய்க்கும், சவரனுக்கு 536 ரூபாய் உயர்ந்து 38ஆயிரத்து520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று 72ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை இன்று 2100 ரூபாய் உயர்ந்து 74ஆயிரத்து 100 ரூபாயாக விற்பனையாகிறது.
Comments