பிரேசில் தனியார் மருத்துவமனைகள் சங்கம் கோவாக்சின் மருந்தை வாங்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் உடன்பாடு

பிரேசில் தனியார் மருத்துவமனைகள் சங்கம் கோவாக்சின் மருந்தை வாங்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் உடன்பாடு
பிரேசில் நாட்டின் தனியார் மருத்துவமனைகள் சங்கம் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுடன் இணைந்து கோவாக்சின் என்னும் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 50 லட்சம் முறை செலுத்தும் கோவாக்சின் மருந்தைக் கொள்முதல் செய்ய பிரேசில் தனியார் மருத்துவமனைகள் சங்கம் உடன்பாடு செய்துள்ளது.
எனினும் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டை இறுதி செய்வது, அந்த மருந்துக்கு பிரேசில் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்குவதைப் பொறுத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments