நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ”ஐ.பி.எஸ் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை”..!

0 9346
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ”ஐ.பி.எஸ் அதிகாரியான மகளுக்கு சல்யூட் அடித்த காவல் ஆய்வாளர் தந்தை”..!

ந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் காவல் ஆய்வாளரான தந்தை, தன்னை விட உயர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா காவல்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி 2018-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று குண்டூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

பதவியின் அடிப்படையில் தந்தையை விட ஜெஸ்ஸி பிரசாந்தி உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில், திருப்பதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ஜெஸ்ஸி பிரசாந்தியை கண்ட அவரது தந்தை ஷியாம் சுந்தர், அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments