விவசாயி என்று கூறுபவர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கலாமா ? முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

0 1589
விவசாயி என்று கூறுபவர் வேளாண் சட்டங்களை ஆதரிக்கலாமா ? முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் எதிர்க்கும் புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிவநல்லூரில், திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பொதுமக்களுடன் கலந்துரையாடிய மு.க.ஸ்டாலின், பெண்கள் நிறைந்த சபையில், திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு விவசாயி எனக்கூறும் எடப்பாடி பழனிசாமி, பாஜக அல்லாத முதலமைச்சர்களைப் போல, வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏன் தீர்மானம் போடவில்லை என கேள்வி எழுப்பினார்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இன்னும் நான்கு மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.

முன்னதாக, மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது பெண்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் ஓணான் புகுந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் கூட்டத்தில் புகுந்தது விஷமற்ற தண்ணீர் பாம்பு என்றும் அதனை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்திய பிறகு கூட்டம் தொடர்ந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments