திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களில் ரூ.29.06 கோடி வருமானம்- கோவில் நிர்வாகம் தகவல்

0 957
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்களில் ரூ.29.06 கோடி வருமானம்- கோவில் நிர்வாகம் தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் 29 கோடி ரூபாய் பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம் வருமானமாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மாதம் 25ஆம் தேதி இங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு முதல் முறையாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 4 லட்சத்து 25 ஆயிரத்து 596 பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்திருப்பதாகவும், 29.06 கோடி ரூபாயை காணிக்கையாக அவர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments