பஞ்சாபில் விவசாயிகள் தங்களது செல்போன் டவர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தகர்ப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு

0 2816
பஞ்சாபில் விவசாயிகள் தங்களது செல்போன் டவர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தகர்ப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள்,பஞ்சாபில்  தங்களது செல்போன் டவர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தகர்ப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

பஞ்சாப்&அரியானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ள ரிலையன்ஸ், தங்களுக்கு எதிராக போட்டி தொலைதொடர்பு நிறுவனங்கள் விவசாயிகளை தூண்டி விடுவதாகவும் தனது மனுவில் கூறியுள்ளது.

ரிலையன்சுக்கு கார்ப்பரேட் அல்லது ஒப்பந்த வேளாண் வர்த்தகர்த்தில் ஈடுபாடு இல்லை எனவும், எதிர்காலத்திலும் அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

விவசாயிகளிடம் நடத்தப்படும் பிரச்சாரம் காரணமாக ஆயிரக்கணக்கான ஜியோ வாடிக்கையாளர்கள் இதர செல்போன் நிறுவனங்களுக்கு மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments