அடுத்த 24 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 36177

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், நாளைய தினம் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றார்.

மேலும், சென்னையில் நகரின் சில பகுதிகளில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் 8-ம் தேதி வரை மழை நீடிக்குமென்றும் தெரிவித்தார். மேலும், 11, 12-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடர வாய்ப்புள்ளதாகவும், வரும் நாட்களில் படிப்படியாக குளிரின் தாக்கம் குறையும் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments