வீட்டின் மேற்கூரையில் ஒளிந்திருந்த 6 அடி மலைப்பாம்பு: வெறுங்கையால் பிடித்த காவலர்

0 1733

மும்பை தாராவியில் வீட்டில் புகுந்த மலைப்பாம்பைக் காவல்துறையினர் பிடித்துக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.

இந்தக் காட்சியை டுவிட்டர் வலைத்தளத்தில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். மும்பை தாராவியில் ஒரு வீட்டில் புகுந்த மலைப்பாம்பு ஓட்டுக்கூரையின் உட்பகுதியில் பதுங்கியிருந்தது.

இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று அதைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். காவலர் முரளிதர் கடும் முயற்சிக்குப் பின் வெறுங்கையால் மலைப்பாம்பைப் பிடித்து வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments