விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை தனது ரசிகர்களும், தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டும் - நடிகர் சிம்பு

விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை தனது ரசிகர்களும், தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டும் - நடிகர் சிம்பு
விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தனது ரசிகர்களும், தனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என நடிகர் சிம்பு வலியுறுத்தியுள்ளார்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படம் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்டர் படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டும் என தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதாகவும், திரையுலகு மீண்டும் செழிக்க, விஜய்யின் மாஸ்டர் திரைப்படமும், தனது ஈஸ்வரன் திரைப்படமும் வழிவகுக்கும் என்று சிம்பு கூறியுள்ளார்.
Comments