மத்திய அரசு, விவசாயிகள் இடையே இன்று 7ம் சுற்றுப் பேச்சுவார்த்தை... குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதிசெய்ய விவசாயிகள் கோரிக்கை

0 543

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்தல் ஆகியவற்றையே தாங்கள் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் நாற்பதாம் நாளாக இன்றும் நீடிக்கிறது. இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏழாம் சுற்றுப் பேச்சு நடைபெற உள்ளது.

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவர்கள், முந்தைய கோரிக்கைகளையே தாங்கள் வலியுறுத்தப் போவதாகவும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் ஜனவரி 6, 26 ஆகிய நாட்களில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறெதையும் தாங்கள் ஏற்க முடியாது என்றும், விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவைப்போல் ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments