தடுப்பூசிகளில் 3 மட்டுமே நல்ல பலனை அளிக்கும், எஞ்சியவை சாதாரண தண்ணீரைப் போன்றவை மட்டுமே - சீரம் சிஇஓ

0 24556

கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளில் 3 மட்டுமே நல்ல பலனை அளிக்கும் எனவும் எஞ்சியவை சாதாரண தண்ணீரைப் போன்றவை மட்டுமே என்றும் சீரம் இந்தியா நிறுவன சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்திருக்கிறார்.

சீரம் இந்தியா தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கோவிஷீல்டுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இதை அடுத்து இன்னும்  10 நாட்களுக்குள் 5 கோடி டோசுகளும், ஒன்றரை மாத காலத்திற்குள் மேலும் 7 முதல் 8 கோடி டோசுகளும் தயாராகும் என அவர் கூறினார்.

ஃபைசர், மாடர்னாவின் தடுப்பூசி மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றின் செயல்திறன் மட்டுமே இதுவரை உலகில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், அதன் செயல்திறன் குறித்து அடார் பூனாவல்லா எதிர்மறை கருத்துக்களை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments