பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், மாணவர், கல்வியாளர்களிடம் இன்று முதல் இந்த வாரம் இறுதி வரையில் கருத்து கேட்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

0 39212

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர், மாணவர், கல்வியாளர்களிடம் இன்று முதல் இந்த வாரம் இறுதி வரையில் கருத்து கேட்கபடும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என்றும், சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி இடைவெளி விட்டு மாணவர்களை அமர வைக்க பள்ளிகள் தாயார் நிலையில் உள்ளது என்றார்.

பொங்கல் பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை மூலமாக அறிக்கை வெளியிடப்படும் என பதிலளித்த செங்கோட்டையன், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் அனைத்து நடைபெறும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments