இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை -சீரம் இந்தியா உறுதி

0 1821

கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு மருந்து தரக்கடடுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ளதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான அடார் பூனா வல்லா இந்தியாவின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று தெரிவித்தார்.

பல மாதங்களாக மருந்து உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறிய அவர், வரும் வாரங்களில் அவை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

அனைத்து விதப் பரிசோதனைகளும முறையாக நடைபெற்றதாகவும் நிபுணர்க்குழுவின் ஆலோசனைகள் பின்பற்றப்பட்டிருப்பதாகவும் பூனாவல்லா கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments