இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனாவையும் எதிர்க்கக்கூடிய வலிமை இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு உண்டு - அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன்

இங்கிலாந்தில் இருந்து பரவும் கொரோனாவையும் எதிர்க்கக்கூடிய வலிமை இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் பலன்களைக் குறித்தும் எதிர்விளைவுகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தனர் .
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன்,வதந்திகளைப் பரப்புவோருக்கு இந்த மருந்துகள் தரமானவை என்று உறுதியளிப்பதாக கூறினார். இங்கிலாந்தில் இருந்து பரவிய வீரியம் மிக்க கொரோனாவையும் இந்த மருந்துகள் முறியடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
முக்கியமான பிரச்சினையை அரசியலாக்குவது கேவலமானது என்றும் காங்கிரசுக்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.
Comments