மற்ற தடுப்பூசிகளை விடவும் கோவாக்சின் மிகச்சிறப்பான முறையில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியது - ஐ.சி.எம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா

0 870

இங்கிலாந்தை ஆட்டிப் படைக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் 29 பேருக்குப் பரவி இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளளார்.

இந்தியாவில் உள்நாட்டுத் தயாரிப்பான இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் கோவி ஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டுக்குப் பயன்படுத்த மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்.ஆர். தலைவர் பல்ராம் பார்கவா, மற்ற தடுப்பூசிகளை விடவும் கோவாக்சின் மிகச்சிறப்பான முறையில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடியது என்று தெரிவித்தார்.

இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளும் சிறப்பான பலன்களைத் தரவல்லவை என்றும் உறுதியளித்த அவர் அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.இந்த தடுப்பு மருந்துகளால் ஏற்படும் பயன்கள் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்றும், எத்தனை பேருக்கு இந்த ஊசியை செலுத்தி கொரோனா வைரசின் சங்கிலியை அறுக்க வேண்டியிருக்கும் என்றும் தெரியாது என்று குறிப்பிட்ட பார்கவா, இருந்தபோதும் இந்த நாள் மனிதகுலத்திற்கே நன்மையைத் தரக்கூடியது என்று குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 29 பேருக்கு வீரியம் மிக்க கொரோனா பரவியதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தபபட்டிருப்பதாக தெரிவித்த பார்கவா, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தினார்.

ஆரம்ப நிலையிலேயே இந்த புதிய வைரஸை தனிமைப்படுத்தி இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றிருப்பதாகவும் இதனை பல்வேறு மருந்துகள் மூலம் பரிசோதித்து வருவதாகவும் தெரிவித்தார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் இதற்கும் சேர்த்து நல்ல பலனைத் தரும் என்று நம்பிக்கையை வெளியிட்ட டாக்டர் பல்ராம் பார்கவா, முகக் கவசம் அணிவதைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments