மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை... சுமுகத் தீர்வு காண மத்திய அரசு தீவிரம்

0 965
மத்திய அரசுடன் விவசாயிகள் இன்று 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை... சுமுகத் தீர்வு காண மத்திய அரசு தீவிரம்

மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே இன்று ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி அருகே விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 40வது நாளை எட்டியுள்ளது. கடும் குளிர், மழைக்கு இடையே இந்தப் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனிடையே, டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்கின்றனர்.  இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு காணப்படும் என நம்புவதாக வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும், இன்றைய பேச்சுவார்த்தையில் இடம்பெறும் அம்சங்கள் பற்றியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தோமர் விவாதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments