டெல்லியில் இன்று தேசிய அளவியல் மாநாடு...பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்க உரை!

0 527

தேசிய அளவியல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவக்க உரையாற்ற உள்ளார். 

தேசிய அணு கால அளவு மற்றும் பாரதிய நிர்தேஷக் திரவியா ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய சுற்றுச்சூழல் தர நிர்ணய ஆய்வகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

2.8 நானோ நொடிகள் என்னும் துல்லியத்துடன் இந்திய நிலையான நேரத்தை தேசிய அணு கால அளவு வழங்கும். சர்வதேச தரத்துக்கு இணையான தர உத்தரவாதத்தை வழங்குவதற்கான ஆய்வகங்களின் பரிசோதனை மற்றும் மேம்பாட்டுக்கு பாரதிய நிர்தேஷக் திரவியா ஆதரவளிக்கும்.

காற்று மற்றும் தொழிற்சாலை மாசு கண்காணிப்பு தளவாடங்களின் சான்றளிப்பில் தற்சார்புக்கு தேசிய சுற்றுச்சூழல் தரநிர்ணய ஆய்வகம் உதவும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments