உத்தரப்பிரதேசத்தில் மயான மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழப்பு

0 1484
உத்தர பிரதேசத்தில் காசியாபாத் மாவட்ட மயானத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேசத்தில் காசியாபாத் மாவட்ட மயானத்தில் உள்ள கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.

முராத்நகர் பகுதியில் உள்ள மயானத்தில் உயிரிழந்த மனிதருக்கு இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கன மழை பெய்ய துவங்கியதால் அங்கிருந்தோர் அருகில் உள்ள மயான கட்டிடத்தில் ஒதுங்கினர். அப்போது திடீரென மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 15 பேர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

தரம் குறைந்த கட்டுமானப்பொருட்கள் மூலம் கட்டிடம் கட்டப்பட்டதே இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments