சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று பொறுப்பேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சஞ்ஜிப் பானர்ஜி இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலை 9.30 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள சஞ்ஜிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர் 50-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments