உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு இந்தியா தயாராகி வருகிறது - பிரதமர் மோடி

0 2323

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு இந்தியா தயாராகி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வார காலங்களில் சுமார் 3 கோடி பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகளைப் போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சீரம் இந்தியா நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வு நிபுணர்களுடன் இணைந்து பரிசோதித்துள்ள கோவிஷீல்டும், இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான பாரத் பயோடெக்கின் கோவாக்சினும் முதல்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கும் முன்களப்பணியாளர்களுக்கும் செலுத்தப்பட உள்ளன.

அடுத்த ஆறு மாதங்களில் 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 50 வயதுக்குட்பட்ட உடல் நல பாதிப்புடையோருக்கு அந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. இதற்கான ஒத்திகைகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. இரண்டு தடுப்பு மருந்துகளுக்கும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் பரிந்துரை செய்ததையடுத்து விஞ்ஞானிகளுக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் மோடி நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் மூலம் பதிவு வெளியிட்ட பிரதமர் மோடி ஒவ்வொரு இந்தியரையும் இந்த முன்னேற்றம் பெருமைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments