ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதல் : நிகழ்விடத்தில் ஒருவர் பலி

0 2233

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஒருவர், நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.

சிவகங்கையில் இருந்து 4 பேர் குற்றாலத்திற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மீது கார் அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சவுந்தர் என்பவர் நிகழ்விடத்தில் உயிரிழந்தார். காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments