ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் லட்சக் கணக்கான ஈராக்கியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் லட்சக் கணக்கான ஈராக்கியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி, ஈராக் சென்ற காசிம் சுலைமானியை வான் தாக்குதல் மூலம் அமெரிக்கப் படைகள் கொன்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வாரமாக, ஈராக் முழுவதும் ஏராளமான கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில் நடந்த முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Comments