சிசிடிவியில் சென்னை நம்பர் ஒன்..! சதுர கி.மீ.க்கு 657 சிசிடிவி கேமராக்கள்...

சிசிடிவியில் சென்னை நம்பர் ஒன்..! சதுர கி.மீ.க்கு 657 சிசிடிவி கேமராக்கள்...
உலக அளவில் நகர்ப்புறங்களில் நிறுவப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில், சதுர கிலோமீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையுடன் உலகின் நம்பர் ஒன் நகரமாக சென்னை திகழ்கிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதனின் முயற்சியால், வர்த்தகர்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களின் உதவியுடன் சுமார் இரண்டரை லட்சம் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டன.
அதன் பலனாக இன்று சென்னையில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் மொத்த எண்ணிக்கை என்று பார்த்தால், 11 லட்சம் கேமராக்களுடன் பெய்ஜிங் உலகின் முதலிடத்தில் உள்ளது.
Comments