பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக முழு கரும்பு ரூ.15க்கு கொள்முதல்; அரசின் நேரடி கொள்முதல் நடவடிக்கைக்கு விவசாயிகள் வரவேற்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு 15 ரூபாய் வீதம் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு 15 ரூபாய் வீதம் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக துண்டுக் கரும்புகளை தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்களிடமிருந்து பெற்று அரசு விநியோகம் செய்து வந்தது.
இம்முறை முழு கரும்பை, 15 ரூபாய் வீதம் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், தங்களுக்கு போதிய லாபம் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகளும் அரசின் நேரடி கொள்முதல் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Comments