தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு... 66 பணியிடங்களுக்கான தேர்வை 2.57 லட்சம் பேர் எழுதினர்

0 916
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு... 66 பணியிடங்களுக்கான தேர்வை 2.57 லட்சம் பேர் எழுதினர்

மிழகம் முழுவதும் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., தீயணைப்பு அலுவலர், வணிகவரித்துறை உதவி ஆணையர் என காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கான குரூப் - 1 முதல் நிலை தேர்வு நடைபெற்றது.

சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 856 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை, மொத்தமாக 2 லட்சத்து 57ஆயிரம் பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தேர்வர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையம் வர அறிவுறுத்தப்பட்டிருந்தனர். தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments